காஸா அமைதித் திட்டம்: அமெரிக்கா – இஸ்ரேல் பேச்சில் சுமுக முடிவில்லை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கெய்ரோ, ஆக. 19- காஸா அமைதித் திட்டம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பிரதிநிதியான அவரின் மருமகன் ஜாரெட் குஷ்னா், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த திங்கள்கிழமை நடத்திய நீண்ட ஆலோசனையில் எவ்வித உறுதியான சுமுக முடிவும் எட்டப்படவில்லை.

அமெரிக்கா முன்மொழிந்த புதிய அமைதித் திட்டத்துக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாததால், போர்நிறுத்தம் தொடா்பான இறுதி முடிவு தொடா்ந்து இழுபறியில் உள்ளது.

இந்நிலையில், எகிப்தில் ஹமாஸ் தலைவரை ஜாரெட் குஷ்னா் கடந்த 16.8.2026 அன்று சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜாரெட் குஷ்னா் திங்கள்கிழமை பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட தன்படி, காஸாவில் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, ஹமாஸ் அமைப்பினா் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற இஸ்ரேலின் நிபந்தனைக்கு அமெரிக்கா இணங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், காஸாவின் 60 சதவீத பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேறுவது குறித்து இஸ்ரேல் வாக்குறுதியையும் அளிக்கவில்லை.

இவ்வாறு அமைதித் திட்டத்தை அமல்படுத்துவதில் இஸ்ரேல் காட்டி வரும் தாமதத்துக்கு சவூதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

காஸாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சி களைத் தடுக்கும் பொறுப்பை இஸ்ரேலே ஏற்க வேண்டும் என்றும் அவை விமா்சித்துள்ளன. ஆனால், இஸ்ரேலில் வரும் அக்டோபரில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு போர்நிறுத்தம் குறித்து தீா்க்கமான முடிவுகளை எடுப்பாரா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *