கருநாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை!
அண்டை நாடு, அண்டை மாநிலங்கள் தமிழர்களைப்
படுகொலை செய்யும் நிலைக்கு முடிவு இல்லையா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அண்டை நாடு, அண்டை மாநிலங்கள் தமிழர்களைப்
படுகொலை செய்யும் நிலைக்கு முடிவு இல்லையா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
கருநாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! அண்டை நாடு, அண்டை மாநிலங்கள் தமிழர்களைப் படுகொலை செய்யும் நிலைக்கு முடிவு இல்லையா? உடனடி நிவாரணமும், உரிய நீதி விசாரணையும் தேவை! தேவை! என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கருநாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான ஷாக்யா வனப்பகுதி யில், மான்களை வேட்டையாடியதாகக் கூறி, ஜகன்னாத தொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்களை கருநாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
யாரைத் திருப்திப்படுத்த
இந்தக் கொடுமை?
இந்தக் கொடுமை?
அப்பகுதிக்குள் மான்களை வேட்டையாட முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது ஏற்கத்தக்கதல்ல. சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால், அதற்காகக் கைது செய்யலாம்; சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? மான்களை வேட்டையாட வந்தார்கள் என்று மனிதர்களை வேட்டையாடும் உரிமையை கருநாடக வனத் துறைக்கு யார் கொடுத்தது? யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கொடுமை? இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பிலும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். கருநாடக அரசு இதற்கு உரிய பதிலைக் கூற வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்குக் கருநாடக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் செம்மரம் கடத்த முயன்றதாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடுமை நடந்தது.
இந்தியக் கடலோரம் அண்டை நாட்டுக் கடற்படை யால் தமிழ்நாட்டு மீனவர்கள் படுகொலை, ஒரே நாட்டுக்குள் அண்டை மாநில அரசுகளால் இப்படி தமிழர்கள் படுகொலை ஆவதற்கு முடிவேது?
தமிழர்கள் உயிர் என்ன மலிவுப் பொருளா?
கருநாடக அரசு, உணர்ச்சிப்பூர்வ நிகழ்வில், உரிய நடவடிக்கையைத் தாமதிக்காமல் எடுக்க முன்வர வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.8.2026
