நல்சார் மாணவர்கள் விவகாரம்: பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.15 தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் ‘இளைஞர்கள் – கரப்பான்பூச்சி’ கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம், ‘‘தலைமை நீதிபதி சூர்யகாந்த் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றால் பட்டம் வாங்காமல் புறக்கணிப்போம்” என மனு அளித்த னர்.

பார் கவுன்சில் ஆப் இந்தியா

இதற்கிடையே பார் கவுன்சில் ஆப் இந்தியா, ‘‘நாட்டின் மிக உயரிய நீதித்துறை பதவியை மாணவர்கள் அவமதித்துவிட்டனர். மேலும், இந்த சம்பவத்தை விரைவாக விசாரித்து ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீகிருஷ்ணா தேவா ராவ்விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

அதுவரை நல்சார் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடிக்கும் எந்தவொரு மாணவரையும் வழக்கு ரைஞராக பதிவு செய்ய மாநில பார் கவுன்சில் அனுமதிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பின. இந்த தடை உத்தரவை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே பார் கவுன்சில் ஆப் இந்தியா திரும்பப்பெற்றுக் கொண்டது.

என்ன உரிமை இருக்கிறது?

இந்நிலையில், பார் கவுன்சில் ஆப் இந்தியா உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று (14.8.2026) விசாரணைக்கு வந்தது. வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு (நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா), ‘‘பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் நடவடிக்கை தேவையற்றது. இதுமாணவர்களுக்கும் எனக்கும் (நீதிபதி சூர்யகாந்த்) இடையேயான விவகாரம். இதில் கேள்வி கேட்க பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு என்ன உரிமை இருக்கிறது? தாங்கள் தவறு செய்திருந்தாலும் கூட, மாணவர்கள் அமைதியான முறையில் போராடுவதற்கான முழு உரிமை உண்டு.

மாணவர் பருவத்தில் நானும் பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டுள்ளேன். பார் கவுன்சில் ஆப் இந்தியா அல்லது வேறு எந்த மாநில பார் கவுன்சில்களும் நல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் மீது எந்தவொரு தண்டனை நடவ டிக்கையும் எடுக்கக் கூடாது. நல்சார் மாணவர்கள் அனைவரும் அச்சமின்றி வழக்குரைஞர்களாகப் பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் சேரலாம். அவர்களுக்கு சட்ட உதவி வழக்குகளுக்கான பேனல் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்ற உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *