கோவை மாணவர் கொலைக்கு அரசே பொறுப்பு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 12- கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இன்று (12.8.2026) சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலையில் காவல்துறை முற்றிலும் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் தொடர்பாக புகார் அளித்தவரின் விவரங்களை காவல்துறையினரே சம்பந்தப்பட்டவர்களிடம் கசியவிட்டதே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணம் ஆகும்

நீதி வழங்க கோரிக்கை: படுகொலை செய்யப்பட்ட மாணவர் அமுதனின் குடும்பத்திற்கு உரிய நீதியை அரசு உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான புகார்களில் ரகசியம் காக்கப்படாததும், காவல்துறையின் மெத்தனப்போக்குமே ஒரு இளம் மாணவனின் உயிரைப் பறித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *