‘‘போராடும் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிடுவேன்; மாணவர்களைச் சுட்டுக்கொல்வேன்’’ என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.11 டில்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக போராடும் மாணவர்களை  சுட்டுக்கொல்லவேண்டும் என்றும், மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் என்றும், இதனால் சில பிரச்சினைகள் வரும் ஆனால் இனிமேல் போராட்டம் என்று நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் என்று பேசிய கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

தலைநகர் டில்லியில் நடைபெற்ற தேர்வு முறைகேடு தொடர்பாக, தவறுக்கு பொறுப்பேற்று அப் போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள் 14 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை 20, 2026 அன்று, அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை கடுமையான தாக்குதலை நடத்தியது.

ரப்பர் குண்டுகள் (பெல்லட் துப்பாக்கி), மின்சாரம் பாய்ச்சக் கூடிய ஆயுதங்கள், ஆணிகள் பொருத்திய லத்திகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

மாணவர்களுக்கு பாதிப்பு

இத்தாக்குதலின் காரணமாக ஒரு மாணவருக்கு கண் பார்வை பறிபோனதுடன், பல மாணவிகளுக்கு எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன.

மாணவர்களின் தீவிர போராட்டத்தைத் தொடர்ந்து, ஜூலை 25, 2026 அன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகினர். கடந்த 12 ஆண்டுகால மோடி அமைச்சரவையில், மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தபோதும் எந்த வொரு அமைச்சரும் பதவி விலகாத நிலையில், தர்மேந்திர பிரதானின் பதவிலகல் பிரதமர் மோடியின் ‘‘அசைக்க முடியாத வலுவான தலைவர்’’ என்ற பிம்பத்தை உடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இப்பதவி விலகலைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கடுமை யாக விமர்சித்தனர்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத், போராட்டம் நடத்திய இளைஞர்களை ‘‘சாக்கடை’’ என்றும், அவர்கள் வாயைத் திறந்தால் ‘‘மல நாற்றம் அடிக்கிறது’’ என்றும் மிகவும் மோசமான சொற்களால் வசைபாடினார்.

சுட்டுக்கொல்ல…

டி.ஜி. மோகன்தாஸ் (ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்): தனது யூடியூப் வீடியோவில், ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த தான் பொறுப்பில் இருந்தால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஜாலியன் வாலாபாக் போல் போராட்டக்காரர்களைச் சுட்டுக்கொல்லவும், மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யவும் உத்தரவிட்டிருப்பேன் எனப் பேசினார். மேலும், இதில் சிலர் உயிரிழந்தாலும் நிலைமை அமைதியாகிவிடும் என வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

மாணவர் அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில், கேரள சைபர் க்ரைம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி, டி.ஜி. மோகன்தாஸ் பேசியதை உறுதி செய்தனர்.

திருவனந்தபுரம் சைபர் க்ரைம் காவல்துறையினர் கொச்சியில் உள்ள மோகன்தாஸின் இல்லத்தில் விசாரணை நடத்தி, நள்ளிரவில் அவரை முறைப்படி கைது செய்தனர். அவர் ்்காட்சிப் பதிவு தயாரிக்கப் பயன் படுத்திய டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் கருத்துகளைப் பரப்பு வோர் மீது சட்டப்படி கடுமையான நட வடிக்கை தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *