நடுவானில் ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரம்: விமானி மீது பழிபோடும் மோடி அரசு

புதுடில்லி, ஆக.10 கடந்த ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்து நாட்டின் புக்கெட் டில் இருந்து டில்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் (A12379) வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய ஏர் இந் தியா விமானம் அங்கும், இங்குமாக நடுவானிலேயே குலுங்கியது. கிட்டத்தட்ட 300 அடிக்கும் கீழ் விமானம் இறங்கியுள்ளது. எனினும் விமானியின் சாதுர்யத்தால் 134 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பெரும் விபத்தில் இருந்து விமானம் தப்பியது. எனினும் 12 பயணிகள் காயமடைந்தனர்.

இந்நிலையில் மோடி அரசு, விமானம் குலுங்கியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தாமலும், பயணம் செய்த விமானத்தின் சோதனை முடிவை வெளியிடாமலும், விமானியை பலிகடா ஆக்கி பிரச்சி னையை திசைதிருப்பும் வேலையை தொடங்கியுள்ளது. இதுதொடர் பாக ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத் தின் கீழ் இயங்கும் விமான விபத்து விசாரணைப் பணியகம் வெளியிட் டுள்ள அறிக்கையில்,‘‘புக்கெட்-டில்லி விமானத்தை இயக்கிய விமானியின் (பெயர் வெளியாவில்லை), மனநலத்தைப் பாதிக் கும் வகையிலான போதைப் பொருள் சார்ந்த பரிசோதனை முடிவுகள் ‘பாசிட்டிவ்’ என வந்துள்ளது. இது விமானப் பயணத்திற்குப் பிந் தைய சோத னையில் அம்பலமாகியுள்ளது. இதனால் அந்த விமானி தற்காலிகமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என அறிக்கைவெளியிட்டுள்ளது. பாஜகவிற்கு அதிக நன்கொடை வழங்கும் ஏர் இந்தியா நிறுவனமும் இதனைஉறுதிப்படுத்தியுள்ளது.

கண்டனம்

இந்நிலையில், மோடி அரசின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்ட மைப்பின் தலைவர் கேப்டன் சி.எஸ்.ரந்த்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மனநலத்தைப் பாதிக்கும் பொருட் கள் உடலில் மூன்று மாதங்கள் வரை தங்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில் ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம். விமானி உட்கொண்டிருக்கக் கூடிய பொருள் என்ன என்பது முதலில் வெளிப்படுத்தப்பட வேண்டும். சில நேரங்களில், விமானப் பணியாளர்கள் சுய மருத்துவம் செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண் டுள்ளனர். வலி நிவாரணிகளில் கூட மார்பில் நீண்ட நாட்கள் இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களிலும் போதைப்பொருள் பரிசோதனை பாசிட்டிவ்என்றுதான் காட்டும். விமானி மீதான நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என விமா னிக்கு ஆதரவாகவும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நட வடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமானப் பணியாளர்கள்
சங்கம்

அதே போல இந்திய விமானப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் கேப்டன் சாம் தாமஸ், “நாட்டில் பல இளைஞர்கள் உடல் உறுதியை வளர்க்கும் சப்ளிமெண்ட்ஸ்களை (ஊட்டச்சத்துப் பொருள்கள்)உட்கொள்கின்றனர். அவற்றில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சில உள்ளன. டியோடரண்டுகளைப் (பெர்பியூம் – நறுமணப் பொருட்கள்) பயன்படுத்தியவர்கள் கூட பரிசோத னைகளில் பாசிட்டிவ் முடிவுகளை பெற்றனர். அதனால் முதலில் பரிசோத னையில் விமானியின் உடலில் இருந்த பொருள் என்னவென்று முதலில் கண்டறியப்படவேண்டும். இந்தியா வில் சுய மருத்துவம் ஒரு பெரிய பிரச்சி னையாக உள்ளது. அதனால் இந்த விஷயம் மிக தீவிரமானது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *