மகளால் சேமிக்கப்பட்ட நிதி அவரின் எதிர்காலத்திற்கே! தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2 Min Read

புதுடில்லி, ஆக. 10– டில்லியை சுதிர் கவாத்ரா என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டில் தனது மகள் ஷாம்லி பெயரில் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கைத் திறந்துள்ளார். ஆனால், பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் மகள் ஷாமிலி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு பி.பி.எஃப் முதிர்வடைந்த நிலையில் பணத்தை எடுக்க ஷாமிலி வங்கியை அணுகியபோது, தனது தந்தை முழு தொகையையும் எடுத்ததுடன், கணக்கை மூடிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணத்தை மீட்டு தரக்கோரி ஷாமிலி வழக்கு தொடர்ந்தார், அதில் தன் தாய்க்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதற்காக, தன் தந்தை வேண்டுமென்றே பி.பி.எஃப் தொகையை எடுத்துவிட்டதாகவும், அதனால் தற்போது கல்வி கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் தான் இருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த டில்லி மாவட்ட நீதிமன்றம், ஷாமிலியின் வைப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்ட முழு தொகையையும் 8 சதவீத வட்டியுடன் வழங்க சுதிர் கவாத்ராவுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு எதிராக சுதிர் கவாத்ரா டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நீனா பன்சால்கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதிர் கவாத்ரா தரப்பில், இந்த பிபிஎஃப் கணக்கில் இருந்த தொகையை கொண்டு மனைவிக்கு கூடுதல் ஜீவனாம்சம் வழங்குவதாகவும், அந்தப் பணத்தை ஷாம்லியும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவின்படி ஜீவனாம்சம் வழங்குவது என்பது தந்தையின் அன்றாடச் சட்டப்பூர்வக் கடமை ஆகும்.

எனவே ஜீவனாம்சத்தையும், வைப்பு நிதியையும் ஒன்றாக கருத முடியாது. மகளின் பெயரில் சேமிக்கப்படும் நிதி என்பது அவளது எதிர்காலத்துக்கான மூலதனம் என்பதால் அதிலிருந்து தந்தை ஜீவனாம்சம் வழங்க முடியாது. முதிர்வுத் தொகை முழுமையாக மகளுக்கே சேரும். எனவே தந்தை தான் செலுத்த வேண்டிய ஜீவனாம்சத்தொகையை, மகளின் வைப்பு நிதி கணக்கிலிருந்து வழங்க முடியாது என்று கூறி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்துவதாக தீர்ப்பளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *