ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை 5.25 சதவீதமாகவே நீடிக்கும்: ரிசர்வ் வங்கி

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மும்பை, ஆக. 9- வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முந்தைய அளவான 5.25 சதவீதத் திலேயே ரெப்போ வட்டி விகிதம் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின்
நிதிநிலைக் கொள்கை

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெறும். அப்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றுவது தொடர்பான முடிவும் அடங்கும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக பன்னாட்டு அளவில் பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

“மேற்காசிய போர் காரணமாக முக்கிய வணிக பாதையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்துக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த சூழலில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே நீடிக்கும்.

நடப்பு நிதியாண்டில் தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகம் ஆகும். உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் உச்சம் அடையும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

ரெப்போ விகிதம்?

ரெப்போ விகிதம் என்பது வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி தற்போது இதில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன் களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனெனில், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக ஆர்பிஅய் நிர்ணயித்தது. தற்போது அந்த விகிதம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *