கோபி மாவட்டத்தில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா

1 Min Read

கோபி, ஆக. 8- கோபி மாவட்டத் தில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா 18.07.2026 அன்று மாலை 6.00 மணியளவில் வீரம்மாள் இல்லத்தில் நடைபெற்றது.

கோபி மாவட்ட ப.க. தலைவர் சீனு.தமிழ்ச்செல்வி தலைமை ஏற்றார். மாவட்ட ப.க. செயலாளர் த.விஜயசங்கர் வரவேற்று பேசினார், மாநில ப.க. அமைப்பாளர் அ.குப்புசாமி தொடக்க உரையாற்றினார்.

மாவட்ட கழகத் தலைவர் மு.சென்னியப்பன், வழக்குரைஞர் ம.கந்தசாமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.வெ.குமணன், ஆகியோர் இந்நிகழ்வின் அவசியம் குறித்து உரையாற்றினர்.

திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் தே.நர்மதா ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூலை அறிமுகப்படுத்தி அதிலுள்ள ஒவ்வொரு அத்தியாயங்களையும் அழகாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் இரா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்  ப.வெற்றிவேல்,பேராசிரியர் காளீஸ்வரன், ப.க. துணைத் தலைவர் க.பழனிசாமி, கோபி துணைச் செயலாளர் இ.கே.மூர்த்தி, மாநில மகளிர் பாசறை செயலாளர் க.திவ்யா, மகளிர் பாசறை துணைத் தலைவர் சி.மதிவதனி, கோபி நகர செயலாளர் சீனு.மதிவாணன், மாணவர் கழகத் துணைத் தலைவர் சூர்யா, கோபி நகர துணைத் தலைவர் ஆனந்தராஜ், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் லெட்சுமணன், பங்களாபுதூர் சின்ன சாமி, எல்.அய்.சி ராஜேஷ், புரட்சிகர இளைஞர் முன்னணி ரமேஷ், பொதுவுடைமை இயக்க தோழர்கள் ராஜசேகர்,வின்சென்ட், உட்பட பலர் கலந்து கொண்டார்கள். ப.க. பொறுப் பாளர் கி.வெள்ளைதுரை நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *