கோபி, ஆக. 8- கோபி மாவட்டத் தில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா 18.07.2026 அன்று மாலை 6.00 மணியளவில் வீரம்மாள் இல்லத்தில் நடைபெற்றது.
கோபி மாவட்ட ப.க. தலைவர் சீனு.தமிழ்ச்செல்வி தலைமை ஏற்றார். மாவட்ட ப.க. செயலாளர் த.விஜயசங்கர் வரவேற்று பேசினார், மாநில ப.க. அமைப்பாளர் அ.குப்புசாமி தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட கழகத் தலைவர் மு.சென்னியப்பன், வழக்குரைஞர் ம.கந்தசாமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.வெ.குமணன், ஆகியோர் இந்நிகழ்வின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் தே.நர்மதா ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூலை அறிமுகப்படுத்தி அதிலுள்ள ஒவ்வொரு அத்தியாயங்களையும் அழகாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர் இரா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல்,பேராசிரியர் காளீஸ்வரன், ப.க. துணைத் தலைவர் க.பழனிசாமி, கோபி துணைச் செயலாளர் இ.கே.மூர்த்தி, மாநில மகளிர் பாசறை செயலாளர் க.திவ்யா, மகளிர் பாசறை துணைத் தலைவர் சி.மதிவதனி, கோபி நகர செயலாளர் சீனு.மதிவாணன், மாணவர் கழகத் துணைத் தலைவர் சூர்யா, கோபி நகர துணைத் தலைவர் ஆனந்தராஜ், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் லெட்சுமணன், பங்களாபுதூர் சின்ன சாமி, எல்.அய்.சி ராஜேஷ், புரட்சிகர இளைஞர் முன்னணி ரமேஷ், பொதுவுடைமை இயக்க தோழர்கள் ராஜசேகர்,வின்சென்ட், உட்பட பலர் கலந்து கொண்டார்கள். ப.க. பொறுப் பாளர் கி.வெள்ளைதுரை நன்றி கூறினார்.
