கருப்பு எங்கள் உணர்வு!!

0 Min Read
கருப்பு வெறும் வண்ணம் அல்ல
அதுதான் எங்களை வென்றெடுக்கும் எண்ணம்!
கருப்பு என்பது அழுக்கு அல்ல
அதுதான் எங்கள் மிடுக்கு!
கருப்பு என்பது மிரட்சி அல்ல
அதுதான் எங்கள் புரட்சி!
கருப்பு தீமை அல்ல
அதுதான் எங்கள் மேன்மை!
கருப்பு எங்கள் உடை மட்டுமல்ல
அதுதான் சமூகநீதிக்கான விடை!
கருப்பு கருமை அல்ல
எங்கள் உரிமை!
எங்கள் உணர்வு!!
எங்கள் உயர்வு!!!
– வெங்கடேசு வேலு, சிகாகோ, யுஎஸ்ஏ,
96770 90438
அமெரிக்கா சிகாகோவைச் சேர்ந்த வெங்கடேசு வேலு தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினார். உடன் அவரது நண்பர் அனந்தராமன் (28.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *