முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளில் வீரவணக்க நிகழ்வுகள்

3 Min Read

பெரம்பலூர் மாவட்டத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக  வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலமாக நடந்து சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணாபுரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இறுதியாக, மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.

தாம்பரம்

7.8.2006 தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் சிற்பியுமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி 8 மணி அளவில் தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில் கழகப் பொதுக்குழு உறுப்பினர்  தாம்பரம் சு.மோகன்ராஜ் மாடம்பாக்கம் அ.கருப்பையா மற்றும் பழக்கடை செந்தில் ஆகியோர் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் அவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.

தஞ்சாவூர்

பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் கலைஞர் சிலைக்கு காலை 9.30 மணிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்டம் மகளிர் அணி துணைச் செயலாளர் மலர்க்கொடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் அ. இராமலிங்கம் தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன்,புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி. கலைச்செல்வன்,செயலாளர் வெ. துரை, இ.பி காலனி பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், கீழவாசல் பகுதி தலைவர் பரமசிவம், செயலாளர் பழக்கடை கணேசன், விடுதலை வாசர் வட்ட செயலாளர் ஏ. வி.என்.குணசேகரன், செயலாளர் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் குழந்தைசாமி, பவர் வசந்தன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் (07-08-2026- தஞ்சாவூர்).

நாகர்கோயில்

சுயமரியாதை சூரியன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி 7.8.2026 அன்று  நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கலைஞர் அவர்களின் சிலைக்கு திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலையில் மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மு.ராஜசேகர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், ஒன்றிய செயலாளர் டாக்டர் பி.கலைச்செல்வன், கோட்டார் பகுதி கழத் தலைவர் ச.ச.மணிமேகலை, கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராஜன், நாகர்கோயில் மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, கன்னியாகுமரி நகர செயலாளர் க.யுவான்ஸ், வடசேரி பகுதி தலைவர் முத்து வைரவன், தோழர்கள் து. செயலர் சி.அய்சக் நியூட்டன் மற்றும் பலரும் கலந்து கொண்டு  தந்தை பெரியாரின் சீடர் கலைஞர் அவர்களின் புகழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

திருவாரூர்

07.08.2026 அன்று காலை 10 மணியளவில் திருவாரூர் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவ சிலைக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி தலைமை ஏற்று மாலை அணிவித்தார். மாவட்ட காப்பாளர் வீர. கோவிந்தராஜன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் ந.ஜெயராமன் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.நேரு, கோ.இராமலிங்கம், க.சி.ராஜா, பாகசாலை பன்னீர்செல்வம், ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கோ.பிளாட்டோ, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *