டி.ஜி.பி. உத்தரவு!
சென்னை, ஜூலை 14– தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் உதவி ஆய்வாளர்களாக (SI) பணியாற்றி வந்த 57 பெண் அதிகாரிகளுக்கு, காவல் ஆய்வாளர்களாக (Inspector) பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முக்கியப் பிரிவுகளில் பணி நியமனம்
பதவி உயர்வு பெற்றுள்ள 57 பெண் ஆய்வாளர்களும், அவர்கள் இதுவரை வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் மாநிலத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:
சைபர் க்ரைம் குற்றப்பிரிவு சிபிசிஅய்டி நுண்ணறிவு பிரிவு மாநில குற்ற ஆவணக் காப்பகம் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல்துறைகள் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் ரயில்வே காவல்துறை தமிழ்நாடு காவல்துறைப் பிரிவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கைத் திறம்படப் பேணவும் இந்தப் பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
