ரூ.7,000 கோடி கான்பூர் – டில்லி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே கரைந்த சிமெண்ட் சாலை மின்விசிறி வைத்து உலர்த்தும் கூத்து!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.7 பாஜக ஆட்சியில் ரூ.7,000 கோடி செலவில் மிக ஆடம்பரமாகத் திறந்து வைக்கப்பட்ட கான்பூர் – டெல்லி நெடுஞ்சாலை, திறக்கப்பட்ட வெறும் 15 நாட்களிலேயே முதல் பருவமழைக்கே பல இடங்களில் சேதமடைந்து கரைந்து போயி ருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இந்த விரைவுச் சாலை திறப்பு விழாவில் மூன்று ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைத்து முன்னணி நாளிதழ்களின் முதல் பக்கத்திலும் விளம்பரப் படுத்தப்பட்ட இந்தச் சாலை, பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே தனது உண்மை யான தரத்தை வெளிப் படுத்தியுள்ளது.

பொதுவாக மண் அல்லது தார்ச் சாலைகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டால் ஈரப்பதத்தைக் காரணம் காட்ட லாம். ஆனால், உறுதியான சிமெண்ட் கொண்டு அமைக்கப் பட்ட சாலை எப்படி மழையில் கரைந்து போனது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்ெகனவே இச்சாலையின் கட்டுமானத்தின் போது, இரும்பு கம்பிகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் குச்சிகள் பயன்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. தற்போது பெய்த முதல் பருவமழையிலேயே பாலத்தின் மேல் பகுதிகள் கரைந்து, சாலை கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

சாலையில் மின்விசிறி

சேதமடைந்த பகுதிகளை அவசர அவசரமாகச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், புதிதாகப் போடப்பட்ட சிமெண்ட் கலவை விரைவாகக் காய வேண்டும் என்பதற்காகத் திறந்தவெளியில் வீட்டு உபயோக மின்விசிறிகளை  வரிசையாக வைத்துள்ளனர். பொதுவாக சிமெண்ட் சாலைகள் மிகவும் மெதுவாக உலரவேண்டும் அதற்காகத்தான் அதன் மீது நீர் ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். காரணம் சிமிண்ட்பூச்சுகளின் இடைவெளியில் காற்று சென்று சிமெண்ட் கலவைப் பிணைப்பை உடைத்துவிடக்கூடாது என்பதற் காகத்தான் –––- ஆனால் இங்கே சிமிண்ட் சாலை போடப்பட்ட உடனேயே மின் விசிறிகள் கொண்டு உலரவைக்கும் அவலம் நடக்கிறது

தொழிற்சாலைகளில் வேதிப் பொருட்களை உலர்த்தப் பயன்படும் அதிவேக விசிறி களுக்குப் பதிலாக, நான்கு சுவர்களுக்குள் 2 அடி தூரத் திற்கு மட்டுமே காற்றை வீசக் கூடிய சாதாரண டேபிள் ஃபேன்களைத் திறந்தவெளியில் அமைத்துள்ளனர்.

திறந்தவெளியில் எதிர் காற்றும் மேல்காற்றும் வீசும் போது, பல அடி தூரம் உள்ள சிமெண்ட் சாலையை இந்தச் சிறிய மின் விசிறிகள் எப்படி உலர்த்த முடியும்?

முன்பு தமிழ்நாட்டில் வைகை அணையின் நீர் ஆவியாவதைத் தடுக்க தர்மாக்கோல் மிதக்கவிட்ட நிகழ்வு கேலிப்பொருளானதைப் போல, தற்போது ஒன்றிய நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் துறையின் கீழ் நடந்துள்ள இந்த “மின்விசிறி கூத்து” சமூக வலைதளங்களில் பலத்த சிரிப்பலையையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

ரூ.7,000 கோடியில் அமைக் கப்பட்ட சாலையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், “பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் பயன் பாட்டிற்கு வருவதை விட, உள்வாங்குவதும், உடைந்து விழுவதும், இடிந்து நொறுங்கு வதுமே வழக்கமாகிவிட்டது” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *