தொகுதி மறுசீரமைப்பு  ஆக.8-இல் தமிழ்நாடு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசிக்க ஏற்பாடு!

1 Min Read

சென்னை, ஆக.7– தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் 8-ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் ஆக.8 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ் புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *