செப்டம்பர் 1 : மேட்டூர் அணை திறப்பு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.27 செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். செப். 1 முதல் 45 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேட்டூர் அணையிலிருந்து செப். 1 முதல் 45 நாள்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தென்மேற்குப் பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026 முதல் 45 நாள்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிடத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

செப். 1 ஆம் தேதி, மேட்டூர் அணை யிலிருந்து, டெல்டா பாசனத் திற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் நீரைத் திறந்து வைக்க உள்ளார்கள்.

2026–2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கருநாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணை யின் குறைந்தபட்ச இருப் பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொது மக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணை யிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லி குண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்ற டைவதையும், கிடைக்கும் ஒவ் வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *