மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா கூட்டம்

மன்னார்குடி, ஆக. 6- 1.8.2026 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில் மன்னார்குடி நகரத்தில் உள்ள தந்தைபெரியார் படிப்பதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன் தலைமையேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தங்க.வீரமணி வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் சா.முரளிதரன், பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதனும், திராவிடர் கழக மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வம், மன்னார்குடி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அழகிரி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சு.அறிவானந்தம், பகுத்தறிவாளர் கழக நகரச் செயலாளர் பேராசிரியர் கோ.காமராஜர், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சு.இராமலிங்கம், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக  அமைப்பாளர் ஆ.சுரேஷ், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளக் கழக செயலாளர் கா. சுருளிராஜன், நீடாமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலர் முரளி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் தொடக்க உரையாற்றினார்.மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நூல் அறிமுக விழா கூட்டத்தை விரிவாக பேசி தொடங்கி வைத்தார்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் நூலைப்பற்றி மிகச் சிறப்பாக ஆய்வுரை வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்களும், பேராசிரியர் பெருமக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *