அரூர் ஜூலை 1- சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு தீர்மான விளக்கபொதுக் கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க அரூர் மாவட்ட கழகம் சார்பில் தனி வாகனத்தில் செல்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம், மற்றும் தீர்மான விளக்கப் பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு தனி வாகனத்தில் வருவதென்ன அரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில்முடிவு .
அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 27.6.2026 அன்று மாலை 3 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தை பற்றி திராவிடர் கழக மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி கருணாநிதி தொடக்க உரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மதமும் ஜாதியும் கடவுள் பக்தியும் புரையோடி போயிருந்த சமூகத்தில் நல்ல பல பகுத்தறிவுக் கருத்துகளை திரைப்படங்களின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்து காலத்தால் அழியாத புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், ஆகியோர் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்துகிறது.
ஜூலை 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்ட தீர்மான விளக்கப் பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும் என்று தமிழர் தலைவர் அவர்கள் வேண்டுகோளை ஏற்று அரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என முடிவு.
தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று எதற்கும் தயார் என்ற அடிப்படையில்அரூர் கழக மாவட்டத்தின் சார்பில்30 இளைஞர்களின் பெயர்ப் பட்டியல் அளிப்பதென முடிவு.
நிகழ்ச்சியில் இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, முன்னாள் மாவட்ட இளைஞரணித் தலைவர் யாழ்திலீபன், கழகச் சொற்பொழிவாளர் சு.பெ.தமிழமுதன், மாவட்ட பகுத்தறிவு கலை துறைத் தலைவர் கவிஞர் கீரை. பிரபாகரன், கவிஞர் சுதாகர், இளைஞரணித் தலைவர் வினோத் குமார், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் இ.சமரசம்,அ,பிரதாப் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வெ.சிலம்பரசன், மொரப்பூர் வித்தியாகர் அவரது வாழ்விணையர் சஜிதா பேகம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தென்றல் பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
