தஞ்சாவூர், ஆக. 4- காவிரிப் பிரச்சினையை தமிழ்நாடே தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் மோகத்தில் உள்ளனர். இதுபோன்ற மோசமான அரசை, தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. முதலமைச்சர், நீர்வளத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கின்றனர்.
வேளாண்மை துறை அமைச்சர் பட்ஜெட் நகலை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு செல்கிறார். இதுதான் இந்த அரசின் லட்சணம். மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டமாக உள்ளது. மேட்டூர் அணை திறக்கப்படாதது பற்றிய கவலை விஜய்க்கு இல்லை.
குறுவை சாகுபடி பொய்த்ததால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மமக பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, மஜக தலைவர் தமீமுன் அன்சாரி, முன்னாள் அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
