சென்னை, ஆக.4- சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 100 நிறுவனங்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்கள் இணைய தளத்தில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன
சென்னை மாநகராட்சி யில் நிதிப் பற்றாக்குறை ரூ.1,970 கோடி என அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். அத்துடன் மொத்தம் ரூ.3,860 கோடி அளவுக்கு மாநகராட்சிக்கு கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சொத்து வரி உள்ளிட்ட வரிபாக்கியை வசூலிப்பதில் மாநகராட்சி வருவாய்த் துறை தீவிரம் காட்டிவருகிறது.
மாநகராட்சிக்கு அதிகளவில் வரிபாக்கி வைத்துள்ள நிறுவனங் களுக்கு விளக்க ‘நோட்டீஸ்’ வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை வருவாய்த் துறை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, மாநகராட்சி நோட்டீஸ் விடுத்தும் வரி செலுத்தாத தனியார் நிறுவனங்கள் பெயரை இணையத்தில் பகிரங்கமாக வெளியிடப் போவதாகவும் மாநக ராட்சி தரப்பில் தெரிவிக் கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் தற்போது மாநகராட்சி இணையதளத்தில் வரி செலுத்தாத 100 நிறுவனங்களின் பெயா்கள் வரி பாக்கி ரசீது எண்களுடன் வெளி யிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ரூ.8.53 லட்சம் முதல் ரூ.4.53 கோடி வரையில் சொத்துவரி பாக்கி வைத்துள்ள நிறுவனங் களின் பெயா்கள் பகிரங்கமாக குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் வரி செலுத்தாவிடில் சட்டரீதியிலான நடவ டிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுபோல சொத்து வரி செலுத்தாத நிறுவனப் பெயா்களை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதல்முறை எனவும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.
