கருநாடகாவில் புதிய அமைச்சரவையில் 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

1 Min Read

பெங்களூரு, ஆக.4- கருநாடகாவில் முதலமைச்சராக இருந்த சித்தராமையா கடந்த மே மாதம் தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதி டி.கே.சிவகுமார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேசுவரனும், அமைச்சர்களாக 12 பேரும் பதவி ஏற்றனர்.

அமைச்சரவையில் காலியாக இருந்த 20 இடங்களை கைப்பற்ற 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டிட்டினர். முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மாநில தலைவர் பி.கே.அரிபிரசாத், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இருமுறை தில்லிக்கு சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்வாலா ஆகியோரை சந்தித்து 3 சுற்றுகள் பேச்சு நடத்தினர். நீண்ட இழுபறிக்குப் பின்னர், 60 நாட்களுக்கு பிறகு நேற்று (3.8.2026) 20 பேர் கொண்ட அமைச்சரவையை பட்டியல் காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள சோசக பவனில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று மாலை 5 மணிக்கு சிவராஜ் தங்கடகலி, ஜமீர் அகமது கான், மது பங்காரப்பா, தினேஷ் குண்டு ராவ், செல்லுவராயசாமி, ரிஸ்வான் அர்ஷாத் உள்ளிட்ட 19 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அமைச்சரவையில் இடம் கிடைக்காத தன்வீர் சேட், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த விஜயபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யஷ்வந்த்ர கவுடா, பேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “அமைச்சரவையில் காலியாக இருந்த 20 இடங்களுக்கு 60 பேர் ஆசைப் பட்டனர். எல்லோரையும் அமைச்சரவையில் சேர்க்க முடியாது. வரும் காலங்களில் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். 2013இல் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *