கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.8.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் நகலுடன் அமைச்சர் வினோத் வழிபாடு. தவெக அரசின் கூட்டணி கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்., சமூக அமைப்புகள் கண்டனம்.

* ஊழல் நிறைந்த கல்வி முறை; மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பப்பு, அயோத்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் ஆகியோர் நாடாளுமன்றத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம்சாட்டி துறவிகள் புகார் அளித்துள்ளனர். ஸநாதனம் எதிர்ப்பு என்ற பெயரில் வாரணாசி காவல்துறை ஆணையர் வழக்கு பதிவு.

* காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல்: 2018ஆம் ஆண்டின் தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜார்கண்டில் தேர்வுக் கசிவுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் தீவிரம்: ஜேபிஎஸ்சி (JPSC) தேர்வு முறைகேடுகளை கண்டித்து, ஜூலை 25 முதல் ராஞ்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத் அரசு பள்ளிகளில் முரண்பாடு: மாணவிகள், எஸ்சி, எஸ்டி சேர்க்கை விகிதம் கடும் சரிவு: 3–5ஆம் வகுப்புகளில் மாணவிகள், எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் குறைந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

தி இந்து:

* விளக்கமற்ற கொலீஜியம் பரிந்துரைகள் தவறான நீதிபதி நியமனங்களுக்கு வழிவகுக்கும்:  முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிறுபான்மையினரை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்தை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி புயான், கொலீஜியம் மீண்டும் வெளிப்படைத்தன்மையை இழந்துள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

*ஊழியர் வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கு: அனில் அம்பானி மீது சிபிஅய் வழக்குப்பதிவு: ரிலையன்ஸ் கேபிடல் பத்திரங்களில் நிதி திசை திருப்பப்பட்டதால், EPFO-க்கு ரூ.1,816 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக சிபிஅய் குற்றஞ்சாட்டியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் பாஜக சதி என்றும், அதற்கு ஆதரவு அளிப்பவர்கள் ‘21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பன்’ எனவும் ராகுல் காந்தி பேட்டி.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *