டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நிறைவடையாத மழைக்கால கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்ய திட்டமா? ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி.
* தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், லண்டனில் தெலுங்கு மக்களை ‘TELANGANA RISING’ வளர்ச்சியில் பங்கெடுக்க அழைத்தார்; இதற்கிடையில் அவரது அமெரிக்கப் பயணத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* த.வெ.க. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாநிலம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைகள் குறித்தும் அக்கறை காட்டவில்லை என கண்டனம்.
தி இந்து:
* ஜூலை 25இல் நாடு தழுவிய போராட்டத்தை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் வாக்குறுதிகளின் நிலையை சி.ஜே.பி. தேசிய செயற்குழு திங்களன்று ஆய்வு செய்ய உள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் அமைதியான நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
* 2027 தேர்தலுக்கு முன் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர் சாதியினரின் அதிருப்தி பாஜகவுக்கு அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் ஓபிசி தலைவர்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியாவில் 15–29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வி அல்லது பயிற்சி எதிலும் ஈடுபடாமல் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அடிப்படையிலான இந்தத் தகவல், திறன் மேம்பாட்டில் உள்ள பெரும் இடைவெளியை வெளிப்படுத்துகிறது.
– குடந்தை கருணா

