2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இலங்கையின் முன்னாள் காவல்துறைத் தலைவருக்கு மரண தண்டனை!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கொழும்பு, ஆக. 2- இலங்கையில் 270க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தடுத்திருக்கக்கூடிய முன் கூட்டிய உளவுத் தகவல்கள் கிடைத்தும், அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிய வழக்கில், இலங்கையின் முன்னாள் காவல்துறைத் தலைவர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சகத் தின் அப்போதைய உயர் அதிகாரி ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோ ருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது.

தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் இவர்கள் இருவரும் குற்றவியல் ரீதியான கடமை தவ றிய குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இலங்கை காவல்துறையின் 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், மரண தண்டனை விதிக்கப்பட்ட மிக மூத்த காவல்துறை அதிகாரி பூஜித் ஜெயசுந்தர என்பது குறிப்பிடத்தக்கது.

2019: ஜெயசுந்தர மற்றும் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு, 4 மாதங்கள் காவலில் வைக் கப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

2021 நவம்பர்: இவர்கள் இருவர் மீதும் முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

2022 பிப்ரவரி: உயர் நீதிமன்றம் இவர்கள் மீதான 855 குற்றச்சாட்டு களையும் தள்ளுபடி செய்து, இருவரையும் விடுதலை செய்தது.

2024 நவம்பர்: இந்த விடுதலையை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. இதில் இரண்டு நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க, மற் றொரு நீதிபதி இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை நீதிபதி களின் கருத்துப்படி இருவருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *