கழகத் தலைவர் இரங்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் (வயது 61) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (1.8.2026) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
அவரது மறைவுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும், மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
02.08.2026
