வியட்நாம் விபத்து  மாண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற தமிழர்கள் 8 பேர் உட்பட 15 இந்தியர்கள்  கடலில் படகு கவிழ்ந்த விபத்தின் காரணமாகப்  பலியாயினர் என்ற செய்தி அதிர்ச்சியும் துயரமுமான செய்தியாகும்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து மகிழ்ச்சி உலாச் சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு நமது வேதனைக்கும்,  துயரத்திற்கும் உரியதாகும்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும்,  வணிக உலகத்தாருக்கும் ஆறுதலையும், மறைந்த வர்களுக்கு  இரங்கலையும் தெரிவிக்கிறோம்.

ஒன்றிய, மாநில அரசுகள் உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பவும், அவர்களை நம்பி வாழ்ந்துவரும் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் மனிதாபிமான முறையில் முன் வர வேண்டும் என்றும் அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை

12.07.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *