பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் மகன் மறைவு

கழகத் தலைவர் இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான்  (வயது 61) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று (1.8.2026) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

அவரது மறைவுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும், மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

02.08.2026 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *