புதுடில்லி, ஆக.2 ஓன்றிய ஆயுத காவல் படைகளில் அய்.பி.எஸ். அதிகாரிகளின் பணி நியமனத்தைக் குறைத்து, அந்தந்தப் படைகளின் சொந்த (கேடர் அதிகாரிகள்) பணி அதிகாரிகளுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
எனினும், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு மாறாக, அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கான இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய ‘சிஆர்பிஎப் பொது நிர்வாகச் சட்டத்தை’ இயற்றியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சுமார் 3,000 பணியிலுள்ள அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32-இன் (Article 32) கீழ் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
