தமிழ்நாட்டிற்கு  ரூ.4.466 கோடி விடுவிப்பு  ஒன்றிய அரசு அறிவிப்பு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.2 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் தரப்பில் நேற்று (1.8.2026) ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில், ‘‘தமிழ்நாடு உட்பட 28 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி பகிர்வாக ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் ஏற்படும்
சாலை விபத்துகளுக்கு இழப்பீடு.!!

உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

டில்லி, ஆக.2 தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற போது மாடு முட்டியதில் உயிரிழந்தார். இறந்தவரின் மனைவி தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் ரூ.29.32 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

எனினும் இந்த வழக்கு மேல் முறையீடு சென்றது, அப்போது தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெருவில் சுற்றித்திரியும் விலங்குகள், நாளின் முடிவில் தங்களிடம் வந்து சேர்வதை அவற்றின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

விலங்குகளின் உரிமையாளரே அவற்றால் நேரிடும் விபத்துகளுக்கு பொறுப்பு ஆவார். இதை கருத்தில் கொண்டு தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் நேரும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உரிய நெறிமுறை களை உருவாக்க உச்சஅநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதே போல வீட்டு விலங்குகளுக்கு அடையாளம் அறியும் கண்காணிப்புப் பட்டையை கட்டாயம் பொருத்த வேண்டும். இதனால் அது எங்கு செல்கிறது என்பதை கண்காணிப்பதோடு, அதற்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நீண்ட காலம் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *