கண்ணீர் விட்டு கதறும் பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

1 Min Read

சண்டிகர், செப்.7- அரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக் காததால் பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கண்ணீர் விட்டு அழுத காட்சிப் பதிவு வைரல் ஆகிஉள்ளது.
அரியானா சட்டப் மன்றத்திற்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில்தனது பெயர் இடம்பெறாததால், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஷசி ரஞ்சன் பார்மர் கண்ணீர் விட்டு அழுவது போன்ற காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சிப் பதிவில், ரஞ்சனிடம் ஒரு செய்தியாளர் பேட்டி எடுக்கிறார். அப்போது, பாஜக வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாதது ஏன் என கேட்கிறார்.
அதற்கு, ரஞ்சன், “நான் பிவானி அல்லது டோஷம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். என்னுடைய பெயர் பட்டியலில் இடம்பெறும் என நினைத்திருந்தேன். ஆனால் என் பெயர் இல்லை”என கூறிவிட்டு அழுகிறார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *