இதுதான் இந்திய தேசியம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கருநாடகாவில் ஆகஸ்ட் 13 அன்று முழு அடைப்புப் போராட்டமாம்!

பெங்களூரு, ஆகஸ்ட் 01- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பதை கண்டித்து கருநாடகாவில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்புப் போராட் டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணை யம், கருநாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என நேற்று முன் தினம் (30.7.2026) உத்தர விட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 4-ஆவது நாளாக கருநாடகாவில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப் பினரும், விவசாய சங்கத் தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் 100க்கும் மேற் பட்டோர் காலி குடங்களுடன் தமிழ்நாட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். மண்டி யாவில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

இந்நிலையில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று (31.7.2026) பெங்களூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கருநாடகாவில் மழை இல்லாததால் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. ஆனால் காவிரி நீர் ஒழுங் காற்று குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டிற்குஆதரவாக உத்தரவிட்டுள்ளன. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ஒரு சொட்டு நீரைக் கூட தமிழ்நாட்டிற்கு திறக்க விட மாட்டோம். கருநாடகாவுக்கு அநீதி ஏற்பட்டதை கண்டித்து ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கருநாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். மாநிலம் முழுவதும் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சி, பள்ளி, கல்லூரிகள் என எதுவும் இயங்காது. தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *