பெங்களூரு, ஜூலை 26- பெங்களூரு உயர்நீதிமன்றம் எதிரில் 24.7.2026 அன்று நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
ஏராளமான மூத்த வழக்குரைஞர்கள் திரண்டு, நீட் தேர்வு ஒழிப்புக்கும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலகக் கோரியும், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு குறித்தும் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சேவகரும், மூத்த வழக்குரைஞருமான தி.நரசிம்மமூர்த்தி தலைமை வகித்தார்.
கழக வழக்குரைஞர் பல்கும் முன்னிலை வகித்தார். சுமார் ஒரு மணி நேரம் உயர்நீதிமன்றம் எதிரில் நீட் தேர்வினை முற்றிலும் நீக்கிடவும், நடந்துள்ள நீட் தேர்வில் வினாத்தாள்களை முறைகேடான வகையில் கசிவு ஏற்படுத்திய இடைத் தரகர்களை கைது செய்து நடவடிககை எடுக்கவும், ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் தொடர் முழக்கமிட்டனர்.
பல மூத்த வழக்குரைஞர்கள் கண்டன உரை நிகழ்ததிய பின்னர், கருநாடக மாநில கழகத் தலைவரும் வழக்குரைஞருமான கே.குணவேந்தர் நெடிய நேரம் நீட் தேர்வை நீக்குதல், நீட்டால் பல மாணவர்கள் உயிர் இழப்பு, நிர்வாக ரீதியான முறைகேடுகளை கண்டித்து உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், வழக்குரைஞர்களும், கழக மாநிலத் துணைத் தலைவர் ஜெ.அருண், பாலன், வழக்குரைஞர் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, வழக்குரைஞர் திவ்யா மற்றும் பெருந்திரளானனோர் கலந்து கொண்டனர். கண்டனங்களை வெளிப்படுத்தும் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெங்களூருவில் உயர்நீதிமன்றம் எதிரில் ‘நீட்’ எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
Leave a Comment
