ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

புதுடில்லி, ஜூலை 26 நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகினார்.

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒன்றிய கல்வி அமைச்சகம் தொடர்ச்சி யான சர்ச்சைகளுக்கும், கொள்கை முரண்பாடு களுக்கும் மய்யப்புள்ளியாகவே இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட கல்வித் துறையில் அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படும் போக்கு காணப்படுகிறது.

2014-இல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்மிருதி இரானியின் பதவிக்காலம் சர்ச்சைகளால் நிறைந்தது. அய்தராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமுலாவின் தற்கொலை மற்றும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெடித்த மாணவர் போராட்டங்கள் ஆகியவை நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மேலும், சென்னை அய்.அய்.டி-யில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்பான ‘அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்’ தடை செய்யப்பட்டதும் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்தது. 2024இல் அமேதி தொகுதியில் தோல்வியுற்றார். தற்போது, கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பிலும் இல்லை.

அதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண் டில் பிரகாஷ் ஜாவடேகர் அத்துறைக்கு அமைச்சராக வந்தார். 2018-இல்
10-ஆம் வகுப்பு கணிதம் 12-ஆம் வகுப்பு பொருளாதாரத்திற்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது பெரும் பின்னடைவாக அமைந் தது. மோடியின் இரண்டாவது அமைச் சரவையில் பிரகாஷ் ஜாவடேகர் சுற்றுச் சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பிறகு, 2019-இல் கல்வித்துறையில் இருந்து மாற்றப்பட்டார். பின்னர் 2021-இல் நடந்த மிகப்பெரிய அமைச்சரவை மாற்றத்தின் போது, எந்த முன்னறிவிப்புமின்றி அமைச்சர் பதவியில் இருந்தே தூக்கியெறியப்பட்டார்

2019இல் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்’ ஒன்றிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை இவரது காலத்தில் தான் அறிமுகப் படுத்தப்பட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணைய வழி வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சவால்களை அமைச்சகம் சந்தித்தது. 2024 தேர்தலில் இவரது சொந்தத் தொகுதியான அரித்துவாரில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்டு, முழுமையான அரசியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

2021ல் தர்மேந்திர பிரதான ஒன்றிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசிய கல்விக் கொள்கை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பிஎம் சிறீபள்ளிகள், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் தொடர மோதல் போக்கை கொண்டிருந்தார். குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்த காரணத்தால், தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதியை நிறுத்தி வைத்தார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மற்றும் யுஜிசி, நெட் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் லட்சக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் வீதிக்குக் கொண்டு வந்துவிட்டன.

டில்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மாணவர்கள் கடந்த 50 நாட்களாக நடத்தி வந்த தீவிரப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

 புதிய கல்வி அமைச்சர் யார்?

தர்மேந்திர பிரதானின் பதவி விலகலைத் தொடர்ந்து, இந்தியாவின் அடுத்த கல்வி அமைச்சர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் எழுந்தது.

இந்தநிலையில், நாட்டின் புதிய கல்வித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு முதல் கருநாடகா மாநிலத்தின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை (2004, 2009, 2014, 2019, 2024) நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2014-2016 வரையிலான காலகட்டங் களில் கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்து கட்சியை வலுப்படுத்தியவர். நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

மோடியின் மூன்றாவது அமைச்சரவை யில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகிய பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது அவரிடம் கூடுதலாகக் கல்வித்துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்க இருக்கும் கல்வித்துறை அமைச்சர் தேசிய தேர்வு முகமையை புனரமைப்பது, வேலைவாய்ப்பினை அதிகரிப்பது, மாணவர்கள் மத்தியில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகிய சவால்களை உடனடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில் உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *