வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாகப் புகார் சமயபுரம் மாரியம்மன் கோவில் மணியம் பணி இடைநீக்கம்..!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சமயபுரம், ஜூலை 26 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மணியமாகப் பணியாற்றிவரும் பழனி என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், பொது மற்றும் நிர்வாக நலன் கருதி தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், இந்தப் பணி இடைநீக்க நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வின்போது நிர்வாக ஒழுங்கின்மை கண்டுபிடிக்கப்பட்டதால், கோயிலில் இளநிலை உதவியாளர் அரிகோவிந்த் என்பவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *