மாணவர் சக்தியின் ஆற்றலுக்கு மற்றுமொரு சான்று!

மும்பை, ஜூலை 23 டில்லியில் நீட் தேர்விற்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் நடந்த அமைதி வழிப் போராட்டத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம், மாணவர் சக்தியின் எழுச்சி யையும், அவர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை யும் உணர்த்துகிறது.

மும்பையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போராட்டத்தை தடுக்கவந்த காவல்துறை வாகனத்தை  தனி மாணவி  தடுத்து நிறுத்தியது,  மீண்டும் ஒரு வரலாற்றை படைத்துள்ளது

1989 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, ராணுவ டாங்கிகளின் அணி வகுப்பை தனி ஒரு மாணவராக நின்று தடுத்தது நினைவிற்கு வருகின்றது. இத்தகைய நிகழ்வுகள், காலங்கள் மாறினாலும், நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் குரல் கொடுக்கும் மாண வர்களின் ஆற்றல் மாறாது என்பதை நிரூ பிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *