நடைபாதைக் கோயில்களும் அகற்றப்படுமா?

மதுரையில் சாலைகளின் நடுவே அமைந்துள்ள வளைவுகளை அகற்றிய மதுரை மாநகராட்சிக்கும் சாலை பாதுகாப்பை உறுதி செய்த நீதிமன்றத்துக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம். அதே போல மதுரை மாநகரங்களில் சாலையோர (ப்ளாட் பாரம்)நடைபாதை முழுக்க  கடைகளாகவும், கடைக்கார்களின் விளம்பரப் பதாகைகளாகவும் , கடைக்குள்ளே வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய பொருட்களையே விளம்பரத்துக்காக நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால்..பொதுமக்கள் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி நடக்கக்கூடிய சூழல் உருவாக்கப்படுகிறது. நடைபாதைக் கோயில்களுக்கோ பஞ்சமில்லை. அதனாலும் விபத்துக்குள்ளான நிறைய நிகழ்வுகள் நடந்துள்ளன. எனவே நடைபாதை மக்களுக்கான நடைபாதையை மக்களுக்கான பாதுகாப்பான பயணத்துக்கான பாதையாக மாற்றியமைக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்கிறோம்.

இரா.லீ.சுரேசு,  மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *