ஆசிரியருக்கு நன்றிக் கடிதம்

கல்வியாளர் கோ. ரங்கசாமி நூற்றாண்டில், அய்யா நினைவுகளுடன்….

ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி!

எங்கள் அப்பா ரங்கசாமி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளில்(18.5.2026) அவரை நினைவு கூறும் வகையில் ஆசிரியர் அய்யா அவர்களின் குடும்பமும், எங்கள் குடும்பமும் இணைந்து ஒரு விடுதியில் இரவு விருந்து ஏற்பாடு செய்து கலந்து கொண்டோம்.

அப்பாவோடு நெருங்கிப் பழகிய பலர் நம்மோடு இல்லை. கவிஞர் அண்ணன் அவர்களால் வர இயலவில்லை. பெரியார் திடல் பொது மேலாளர் நண்பர் சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்பா அவர்கள் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த சம காலத்தில் நம்முடைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராக விளங்கும் பொத்தனூர் சண்முகம் அய்யா அவர்கள் நேஷனல் கல்லூரியில் பயின்றவர். அந்த மாலைப் பொழுது (18.5.2026) இனிமையாக இருந்தது.

ஆசிரியர் அய்யா அவர்கள் அனைவரிடமும் மனம் விட்டுச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அத்தை அவர்கள் எப்பொழுதும் போல பாசத்தோடு பேசிக் கொண்டு இருந்தார்கள் – எளிமையாக.

ஆசிரியர் அய்யா அவர்களோடு 60 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப ரீதியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆசிரியர் அவர்கள் எங்கள் மூத்த அண்ணன் அவர்களை நம் திராவிடர் கழகத்தின் மேடையில் பேச வாய்ப்புக் கொடுத்து, அவர் பேசுவதைக் கண்டு மகிழ்ந்தவர். மூத்த அண்ணன் அவர்கள் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

எங்கள் அக்கா சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர அய்யா அவர்கள்தான் பெரும் உதவி செய்தார்கள்.

மருத்துவக் கல்லூரியில் (MMC ) பயிலும் காலத்தில்  அக்கா அவர்களை ஆசிரியரின் சகோதரி மகள் என்றுதான் அறிவார்கள்.

எங்கள் சின்ன அண்ணன் அவர்கள் பொறியாளர்; சிறு வயதில் இருந்தே நன்கு படிக்கக் கூடியவர்.

பள்ளிப் பருவத்தில் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர். அதனால் அவரோடு பல விடயங்கள் பேசி அவரை உற்சாகப்படுத்துபவர் நம் ஆசிரியர் அவர்கள்.

இரண்டு நாள்களுக்கு முன்பு அந்த விருந்து நிகழ்ச்சியிலும் பேசி மகிழ்ந்தார்.

என்னை மறைந்த சுரேந்தர் சேர்த்தவர் அவர்களின் அலுவலகத்தில் (பி.பி. நாயுடு & Co)  CA படிப்புக்கு சேர்த்தவர்.

CA தேர்ச்சி பெற்ற பிறகு, நம் நிறுவனங்கள் அனைத்திற்கும் தணிக்கையாளராக நியமித்து என்னை பெருமைப்படுத்தியவர் அய்யா அவர்கள். சுரேந்தர் அலுவலகத்தில் அனைவரும் என்னை ஆசிரியர் அவர்களின் சகோதரி மகன் என்றுதான் அறிவார்கள்.

எங்களுடைய அக்கா, சின்ன அண்ணன்,என் திருமணம், எங்கள் அக்கா மகள்,  என்னுடைய மகள் திருமணம் எல்லாமே ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில் தான் நடைபெற்றது.

நாங்கள் அனைவரும் அய்யா, அம்மா அவர்கள் இருவரையும் ‘‘மாமா, அத்தை’’ என்றுதான் அழைப்போம்.

அன்பு, அருள், கவிதா, அசோக் அண்ணன் அவர்கள் அனைவரும் எங்கள் அம்மா அப்பா இருவரையும் “மாமா, அத்தை’’ என்றுதான் அழைத்துப் பழகி வருகிறோம் இன்று வரை.

ஆசிரியர் மாமா அவர்களுக்கும் அத்தை அவர்களுக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய நன்றியை செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆடிட்டர் ஆர். ராமச்சந்திரன்
மூலமாக குடும்பத்தினர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *