நீட், EWS எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம் கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…

  1. ‘விடுதலை’யில் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் பரப்புரை செய்வதற்கான காவல்துறை அனுமதியை பெற வேண்டும்.
  2. தங்கள் மாவட்டத்தில் பரப்புரைப் பயணக் குழு வருகை தரும் வழித்தடத்தை குறிப்பிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தகவல் கடிதம் ஒன்று கொடுத்திட வேண்டும்.
  3. இரவு தங்கும் இடங்களில் 30 முதல் 40 நபர்கள் தங்குவதற்கான உரிய ஏற்பாடுகளையும் இரவு உணவு மற்றும் காலை உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  4. தங்கள் மாவட்ட எல்லையில் வரவேற்று, அடுத்த மாவட்டம்எல்லை வரை பரப்புரைக் குழுவினரோடு குறைந்தது 10 வாகனங்களுடன் செல்ல வேண்டும்.
  5. ஒத்த கருத்துள்ள அமைப்புகளை சேர்ந்த பொறுப் பாளர்களுக்கு தகவல் தெரிவித்து பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  6. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பரப்புரைக் குழு வந்தவுடன் குழுவில் இடம் பெற்றுள்ள பேச்சாளர் பேசுவதற்கு உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும்.
  7. வாகன பரப்புரைப் பயணம் குறித்தான செய்தியை பிளக்ஸ் மற்றும் துண்டறிக்கை விளம்பரங்களை முன்கூட்டியே செய்திட வேண்டும். கழகக் கொடிகளை ஏராளமாகக் கட்டிட வேண்டும்.
  8. உள்ளூர் அச்சு, மின்னணு ஊடக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து நிகழ்ச்சியைஅவர்கள் ஊடகங்களில் இடம்பெறச் செய்ய ஆவணம் செய்ய வேண்டும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *