‘அய்யோ அப்பா!’ கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில் சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் கேரள அரசுக்கு அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்

1 Min Read

கேரள அரசுக்கு அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 14 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் வலியு றுத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியா ளர்களிடம் அவர் நேற்று (13.7.2026) கூறியதாவது: சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து பக் தர்கள் வருவதால் சீசன் காலங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.   சபரிமலையில் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, அவசர மருத்துவ வசதி இல்லாமல் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அவதிப்படுகின்றனர்.

இந்த அடிப்படை தேவைகளை உடனடி யாக பூர்த்தி செய்ய தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரி மலை அய்யப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இது உலகெங்கும் உள்ள அய்யப்ப பக்தர் களின் முக்கியமான கோரிக்கையாகும். அதன் படி, தங்கத் திருட்டு வழக்கை நீதிமன்ற மேற் பார்வையில் சிபிஅய் விசாரிப்பதற்கு உத்தரவிட கேரள காங்கிரஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளை  சபரிமலைக்கு  இலவசமாக அழைத்துச் செல்லும் பயணத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *