சேலம் அருகே அரசுப் பள்ளியில் ‘நீட்’ பயிற்சிக்கு வடமாநில ஆசிரியர்கள் நியமனமாம்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சேலம், ஆக. 21- சேலம் அருகே அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் பிளஸ்-2 வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரிப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். குறிப்பாக பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. மற்றும் பிற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிக மாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அண்மையில் நடந்த நீட் மறு தேர்வில் குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், குப்பூர் அரசு மாதிரிப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜெ.இ.இ. நுழைவு தேர்வு அளிப்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களை தவிர வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மொழி தெரியாத ஹிந்தி தெரிந்த ஆசிரியர்களை வைத்து தமிழ்நாடு மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்து கொடுக்க முடியும்? என்றும், இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் கேட்டபோது, ‘குப்பூரில் உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் வெளிமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்திருப்பது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரித்து வருகிறோம். அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என்றார். சேலத்தில் அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கண்டன பதிவு பரவலாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *