கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.7.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* கரூரில் மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், தவிக்க விட்டு சென்றவர்கள் யார்.!! எல்லாம் மக்களுக்கு தெரியும் என திமுக நாடாளுமன்ற உறுபபினர் கனிமொழி முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி. கரூர் துயர சம்பவத்திற்கு திமுக மற்றும் கரூர் காவல்துறை தான் காரணம் என்று குற்றம்சாட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

* கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க என சென்னை  உயர்நீதிமன்றம் நிபந்தனை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி இல்லை: தேசிய பாடல், தேசிய கீதத்திற்கு பிறகு தான் பாட வேண்டும்: புதிய நெறிமுறைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்

* அயோத்தி ராமன் கோயில் பணத்தை கொள்ளையடித்த கும்பல், பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய அய்ந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீண்டகாலமாக தாமதமான பஞ்சாயத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு வழிவகுக்கும் வகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) கணக்கெடுப்பை ராஜஸ்தான் தொடங்கியுள்ளது.

தி இந்து:

* புதிய உயர்மட்ட அமைப்பை (VBSA) எதிர்க்கும் அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள்: யுஜிசி, ஏ.அய்.சி.டி.இ மற்றும் என்சிடிஇ ஆகியவற்றை நிர்வகிக்கும் சட்டங்களை ரத்து செய்து, அவற்றுக்குப் பதிலாக ஒரே ஒரு உயர்மட்ட அமைப்பை உருவாக்கும்  வி.பி.எஸ்.ஏ. மசோதா விதி முறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அய்.அய்.டி.-க்கள் மற்றும் அய்.அய்.எம்.-கள் உள்ளிட்ட ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்’ (INIS) கோரிக்கை விடுத்துள்ளன

* உயர்கல்வி மசோதாவை எதிர்க்கும் காங்கிரஸ்: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது விக்ஸித் பாரத் ஷிக்ஷா அதிஷ்டான் மசோதா கொண்டுவரப்படும்போது, என்டிஏ ஆளும் மாநிலங்கள், குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், அதனை எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

* அயோத்தி நன்கொடை தொகை ஊழல் வழக்கு: 13.7.2026 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை. விசாரணைக்காக மூன்று தனித்தனி மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவுள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *