ஆஸ்திரேலியா, ஜூன் 29– ஆஸ்திரேலியாவில் 18,000 அடி உயரத்தில் இருந்து தனது தாத்தா ஸ்கைடைவிங் செய்யும் இந்தியர் ஒருவரின் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. சமூக ஊடகப் பயனர்கள் அந்த முதியவரின் தைரியம், உற்சாகம் மற்றும் அனைவரையும் ஈர்க்கும் மனப்பான்மையைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த காட்சிப் பதிவைப் பகிர்ந்த அங்கித், இது தனது தாத்தாவின் முதல் ஸ்கைடைவிங் அல்ல என்றும் வெளிப்படுத்தினார். அவர் இதற்கு முன்பு 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்திருந்தாலும், இந்த முறை இருவரும் ஆஸ்திரேலியாவில் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சவாலை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த முறை, 18,000 அடி
காட்சப் பதிவின் தொடக்கத்தில், அங்கித், “சோ பாய், அபி ஹம் அப்னே பாபாஜி கோ லேகர் ஆயே ஹைன் ஸ்கைடிவிங் கர்வானே கே லியே ஆஸ்திரேலியா கே அந்தர். பிச்லி பார் 15,000 அடி சே கர்வாயி தி, அப்கி 0 பர் 18, 0 பர்ஹே 0 பர்ஹே” என்று சாகசத்தை அறிமுகப் படுத்துகிறார். (அதனால், தாத்தாவை ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங்கிற்கு அழைத்து வந்துள்ளோம். போன முறை 15,000 அடியில் இருந்து செய்து, இந்த முறை 18,000 அடியில் இருந்து அதையும் ஆஸ்திரேலியாவில் செய்ய வைக்கிறோம்.
விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்பு, அங்கித் தன் தாத்தாவிடம் விளையாட்டுத்தனமாக, “பாபா பயப்பட மாட்டாயா?” என்று கேட்கிறான் . ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், அந்த முதியவர் புன்னகைத்துக்கொண்டே, ” யார் பயப்படுவது? நானா?” என்று பதிலளிக்கிறார். இந்த நம்பிக்கையான பதில், பரவிய காசிப் பதிவின் மிக முக்கியமான தருணமாக விரைவிலேயே மாறியது.
அங்கித் அந்த காட்சிப்பதிவை, “தாத்தா ஜி ஆஸ்திரேலியாவில் 18,000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் செய்கிறார்” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
எலான் மஸ்கிற்கு பிறகு
அதிக ஊதியம் வாங்கும்
இந்திய நிர்வாக அதிகாரி!
வாசிங்டன், ஜூன் 29- பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு பிறகு உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமை இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஷங்க் மித்ராவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ‘வெல்டவர்’ என்னும் முன்னணி ஹெல்த்கேர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் (சிஇஓ) ஷங்க் மித்ரா உலகளவில் அதிக ஊதியம் பெறும் சிஇஓக்களில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். ஷங்க் மித்ராவின் ஆண்டு ஊதியம் 821 மில்லியன் டாலர்( ரூ.7,744 கோடி) என வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
உலகளவில் ஷங்க் மித்ராவின் ஊதியத்தை விட தொழிலதிபர் எலான் மஸ்க் மட்டுமே அதிக ஊதியம் பெறுகிறார். அவருடைய ஊதியத்தின் மதிப்பு 158 பில்லியன் டாலர்கள்(ரூ.14 ஆயிரம் கோடி) ஆகும். மேற்குவங்கம், கொல்கத்தாவில் பிறந்த ஷங்க் மித்ரா, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர், உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
தனது தொழில் வாழ்க்கையை புகழ்பெற்ற பிடபிள்யூசி என்ற நிறுவனத்தில் தொடங்கினார். அங்கு 5 ஆண்டுகள் நிதி மற்றும் வணிக ஆலோசனை பிரிவில் பணியாற்றினார்.பிறகு 2009இல் பிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் அனலிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு வெல்டவர் நிறுவனத்தில் இணைந்த மித்ரா, கடுமையான உழைப்பால் 2018இல் முதன்மை முதலீட்டு அதிகாரியாகவும் பின்னர் 2020 அக்டோபரில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
