“முட்டாள்தனமான விதிமீறல்!” ஹார்முஸ் நீரிணையில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

2 Min Read

வாசிங்டன், ஜூன் 28- அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் நீரிணையில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற் றம் சாட்டியுள்ளார்.

ஈரானின் இந்த நடவடிக்கை இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறும் செயல் என்றும் அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற கப்பல் களைக் குறிவைத்து, ஈரான் குறைந்தது நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒரு ட்ரோன், மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஒரு சரக்குக் கப்பலின் மேல் தளத்தைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அது தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எஞ்சிய மூன்று ட்ரோன்களை எங்கள் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இது நிச்சயமாக எங்களின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறியுள்ளதைக் காட்டுகிறது” என்று குறிப் பிட்டுள்ளார்.

ட்ரம்ப் குறிப்பிட்ட கப்பலின் பெயரைத் தனது பதிவில் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தைவானைச் சேர்ந்த பிரபல கப்பல் போக்கு வரத்து நிறுவனமான எவர்க்ரீன் மெரைன் இதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கமளித்துள்ளது. தங்களுக்குச் சொந்தமான, சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த எவர் லவ்லி என்ற கன்டெய்னர் கப்பல், ஓமன் கடற்பரப்புக்கு அருகே ஹார்முஸ் நீரிணையில் சென்றபோது அடையாளம் தெரியாத பொருள் ஒன்றால் தாக் கப்பட்டது உண்மைதான் என்று அந்நிறுவனம் உறு திப்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் கப்பலின் மேல் தளத்தின் சில ஜன்னல்கள் சேத மடைந்த போதிலும், கப்பலில் இருந்த 21 ஊழியர்களுக்கும், உள்ளே இருந்த சரக்குகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பாதுகாப்பாகத் தனது பயணத்தைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் தான் 60 நாட் களுக்கான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வணிகக் கப்பல் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இது என்பதால்,ஹார்முஸ் நீரிணையில்  சிக்கியிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட கப்பல்களைப் பாது காப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அய்நா சபையின் பன்னாட்டு கடல்சார் அமைப்பு தனது மீட்புப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மறுபுறம், ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி, ஈரானின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையில்  வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலின் பாதுகாப்பிற்கும் தங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று எக்ஸ் பக்கத்தில் எச்சரித் துள்ளார்.

அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ “ஈரான் தொடர்ந்து கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தினால், அது மிகப்பெரிய விளைவு களைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ள சூழலில், இந்த ட்ரோன் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே யான இறுதி அமைதிப் பேச்சுவார்த்தையைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *