உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!

1 Min Read

புதுடில்லி, மே 10– குறுகிய தூர இலக்குகளை தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே மேம்ப டுத்தப்பட்ட அதி நவீன ஏவுகணையை ஒடிசாவில் நேற்று (9.5.2026) இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர்.

அதிவிரைவாக செயல்பட்டு நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லி யமாக தாக்கி அழிக்கும் வகையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபி விருத்தி கழக (டிஆர்டிஒ) விஞ்ஞானிகள் இந்த ஏவுகணையை மேம்படுத்தியுள்ளனர். 25 முதல் 30 கி.மீ தூரம் வரை சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் படைத்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் முறையாக சோதனை நடத்தப்பட்ட நிலையில், 2 ஆவது முறையாக ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மய்யத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் செலுத்து வாகனம் மூலம் நேற்று (9.5.2026) காலை 11.30 மணியளவில் விண்ணில் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. ஏவுகணையின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் மீண்டும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி,டிஆர்டிஒ விஞ்ஞானி களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிலத்தில் இருந்து விண்ணில் பாயும் ஏவுகணை உரு வாக்கத்தில் இதுவொரு முக்கியமான மைல் கல் என்றும் பாராட்டினார்.

டிஆர்டிஓ செயலாளர் டாக்டர் எஸ்.கிறிஸ்டோ பரும், சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏவுகணை சோதனையின்போது ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி சோதனை கூடத்தின் இயக்குநர் எம்எஸ்ஆர் பிரசாத், பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோ சகர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *