லக்னோ, ஜூன் 28 உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் நடைபெற்றதாகக் கூறப்ப டும் இரு நிகழ்வுகள், ஒரே வகையான குற்றச்சாட்டு களுக்கு எதிராக மிகவும் வேறுபட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது “ஒரே சட்டம், வேறு வேறு நீதி” என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
முதல் நிகழ்வு
மார்ச் 16 அன்று பா.ஜ.க. இளைஞர் அணி தலைவர் ராஜத் ஜெய்சுவால் அளித்த இஃபதார்(நோன்பு) திறந்த போது இஸ்லாமியர்கள் கங்கை நதியில் இருந்த படகில் கோழி இறைச்சியை உண்டு, கங்கையில் எச்சில் துப்பினார்கள் என்ற புகாரின் அடிப்படை யில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் உணவை நதியில் வீசியதற்கோ, எச்சில் துப்பியதற்கோ சான்று ஆதாரம் இல்லை
மார்ச் 17 அன்று, 14 பேரும் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை புண்படுத்தியது, பொது அமைதியைக் குலைத்தல், நீர் மாசுபடுத்தல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் பிணையில் வெளிவரமுடியாத கடுமையான பிரிவு ஆகும்
மார்ச் 23 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதி களில் பிணை மனுக்கள் இருமுறை நிராக ரிக்கப்பட்டன.
இறுதியாக மே 18, அதாவது ரம்ஜான் பண்டிகை எல்லாம் முடிந்த பிறகு 2 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த பின்னரே பிணை வழங்கப்பட்டது. அதுவும் கடுமையான நிபந்தனைகள்! வாரணாசியை விட்டு வெளியே செல்லக்கூடாது; காலை, மாலை இரண்டுமுறை நீதிமன்றத்தில் உள்ள காவல்நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும். கைதானவர்களில் 10 பேர் ஆட்டோ ஓட்டுநர்கள் என்பது குறிப்பி டத்தக்கது. அவர்களின் வாழ்வாதாரம் திட்ட மிட்டு முடக்கப்பட்டது
இரண்டாவது நிகழ்வு
ஜூன் 12 ஆம் தேதி 5 இந்து இளை ஞர்கள் கங்கை நதியில் படகில் இறைச்சி சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி ஆடினார்கள் கங்கை நீரில் வாய்க் கொப்பளித்தனர், இறைச்சி கழிவுகளை நதியில் வீசினார்கள், சிறுநீர் கழித்தார்கள். இந்தக் காட்சிப் பதிவு அவர்களாலேயே எடுக்கப்பட்டு, சமூகவலை தளத்தில் வெளியிட்டனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் தாங்களாகவே ‘சூ மோட்டோ’ வழக்குப் பதிவு செய்து, அவர்களை உடனடியாக கைது செய்தனர். ஆனால் என்ன பிரிவில் கீழ் பொது இடத்தில் அசிங்கப் படுத்துதல், உள்ளிட்ட லேசான பிரிவுகளே (299 BNS) பயன்படுத்தப்பட்டன. இதற்கு இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று காகிதத்தில் எழுதி கையெழுத்திட்டு, ஆதார் அட்டை நகல் இணைத்துக் கொடுத்த பிறகு, உடனடியாக எக்ஸிக்யூட்டிவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியது.
ஒரே நதி. ஒத்த குற்றச்சாட்டுகள். ஆனால், முற்றிலும் வேறுபட்ட நடைமுறை! இந்த இருநிகழ்வுகளும் ஒப்பிடப்படும்போது, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற கொள்கை எங்கே? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வலுத்து வருகிறது. “இரு வேறு தரநிலைகள்” என்கிற விமர்சனம் தீவிர மடைந்துள்ளது.
