திருப்பூர். ஜூன் 26- போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், நலவாரிய உதவித்தொகை கிடைப் பதில் மாற்றுத்திறனாளிகள். வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.மாற்றுத்திறனாளிகளின் கரம்பிடித்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசு கள் எத்தனையோ திட் டங்களைத் தீட்டி வரு கின்றன.
தமிழ்நாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக 22 வகை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை களும், மாதாந்திர உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நல வாரியம் மூலமாக அவர்களின் கல்வி, திருமணம், மகப்பேறு, மூக் குக்கண்ணாடி வாங்குதல், விபத்து பாதிப்புகள், மரணம் மற்றும் ஈமச் சடங்குகள் போன்ற வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் தனிச் சிறப்புடன் நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்காகப் பயனாளிகள் இணையதள வாயிலாக வும், நேரடியாகவும் நம்பிக்கையோடு விண் ணப்பித்து, அரசின் உத்தரவுக்காகக் காத்திருக் கின்றனர்.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப் பித்துப் பல மாதங்கள் கடந்தோடிவிட்ட நிலையிலும், இன்னும் நிதி வந்து சேரவில்லை என மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் கண்ணீ ரோடு புலம்புகின்றனர்.
திருப்பூர் மாவட்டத் திற்குப் போதிய நிதி ஒதுக்கீடு வராததால், விண்ணப்பங்களை அரசுக்குப் பரிந்துரைத்து விட்டுக் காத்திருக்கிறோம். கடந்த நிதியாண்டில் (2025-26) மட்டும், 25 லட்சம் ரூபாய் அளவுக்கு நலவாரிய உதவித்தொகை வழங்க வேண்டியுள்ளது.
நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் ஏராளம். அரசு இதற்கான நிதியை விடுவித்ததும், பயனாளிகளுக்கு உடனே அது போய்ச் சேரும் என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள இச்சூழ்நிலையில், இந்த விளிம்புநிலை மனிதர் களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
