டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அயோத்தி ராமர் கோயிலில் ரூ.200 கோடி முறைகேடு; 17 பேர் மீது வழக்குப்பதிவு: சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரை.
* என்சிஇஆர்டி 9ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் நெருக்கடி நிலை பகுதி சேர்ப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோகன் யாதவ் மற்றும் அவரது மனைவி சீமா ஆகியோர் 73% பங்குகளைக் கொண்டுள்ள நிறுவனம், அவர் முதல்வரான பிறகு குறைந்தது 2.6 ஏக்கர் நிலத்தை ரூ. 1.43 கோடிக்கு வாங்கியுள்ளது. மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவுக்கு பாஜக ஆதரவு; அவரது நிறுவனம் 2021-க்குப் பிறகு நிலத்தை நான்கு மடங்கு அதிக விலைக்கு வாங்கியது குறித்த விவகாரத்தில் மவுனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஸ்போர்ட் கூட ஒருவரின் குடியுரிமையை நிரூபிக் காது என அறிவிப்பதன் மூலம், அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தியர்களின் குடியுரிமையை எந்தவிதக் காரணமும் இன்றி தன்னிச்சையாக பறிப்பதற்கு அவர்கள் அடித்தளம் அமைத்து வருகின்றனர், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் குற்றச்சாட்டு.
தி இந்து:
* விஜய்யின் “உங்கள் தந்தை எங்கே?” என்ற கிண்ட லுக்கு பதிலடியாக, “நான் மக்களின் இதயங்களில் இருக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தி டெலிகிராப்:
* ஒடிசா பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளுக்கு என்.சி.இ.ஆர்.டி.யே காரணம்; இது தேசியக் கல்விக் கொள்கை (NEP) மற்றும் வகுப்பறைப் பாட உள்ளடக்கம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் இடம்பெற்றுள்ள தொன் மவியல் மற்றும் நம்பிக்கை சார்ந்த உள்ளடக்கங்கள், அறிவியல் மனப்பான்மையையும் பாடத்தின் பொருத்தப்பாட்டையும் பலவீனப்படுத்துவதாகக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘மாணவர்கள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்’: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மோடி அரசு மற்றும் தர்மேந்திர பிரதான் மீது ராகுல் காந்தி தாக்கு. ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதாகவும், மாணவர்களின் நலன்களை பாதுகாக்க தவறியதாகவும் குற்றம் சாட்டினார்.
– குடந்தை கருணா
