புதூர், ஜூன் 26- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் .உரத்தநாடு புதூரில் தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல். பரமசிவம் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம் வரவேற்று உரையாற்றினார். கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் சி அமர்சிங் தலைமையேற்று சிறப்பித்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா. செந்தூர் பாண்டியன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் நெடுவை கு. அய்யாதுரை, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், துணைத் தலைவர் நெடுவை கு.நேரு, துணைச் செயலாளர் நெடுவை கு. லெனின், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் க. மாரிமுத்து, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலா ளர் நெல்லுபட்டு ஆ.ராமலிங்கம், ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவர் துரை. தன்மானம், ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் ரெ.சதீஷ்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் துணைச் செயலாளர் மு. செந்தில்குமார், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லு பட்டு ஆ. ராமலிங்கம் ஒக்கநாடு மேலையூர் கிளை கழக செயலாளர் நா.வீரத்தமிழன், ஒக்கநாடு மேலையூர் கழகத் தோழர்கள் பொறியாளர் ப. பாலகிருஷ்ணன், மா.தென்னகம், ச. கலைச்செல்வன், ஒன்றிய மாணவர் கழகச் செயலாளர் இர.நிரஞ்சன் குமார், கக்கரக் கோட்டை வீர. இளங்கோவன், மண்டல கோட்டை இரா.மோகன்தாஸ், செந்தில்குமார், மாணவர் கழக தோழர் ஜெ.அன்பு வீரமணி, மு.செ.தருண், மகளிர் பாசறை மாநல். முகில் தென்னமநாடு ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கழகப் பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் கருத்துரை யாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிக்கண்ணு, கண்ணுகுடி கிழக்கு பெரியார் பெருந்தொண்டர் பதிவாளர் மு. அய்யாவு,வெள்ளூர் காடு பெரியார் பெருந்தொண்டர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம் அவர்களின் மூத்த சகோதரியின் மகன் புலவன்காடு துரை. அசோக்ராஜ ஆகியோர் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
31.5.2026 அன்று நடைபெற்ற கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழா சிறப்பாக நடைபெற அனைத்து வகை யிலும் பங்கெடுத்து சிறப்பித்த தோழர்களுக்கு இக்கூட்டம் நன் றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவர் அவர் களின் அறிவிப்பின்படி ஆயிரம் இளைஞர்கள் அறப் போராட்ட களவீரரின் பட்டியலில் உரத்தாடு தெற்கு ஒன்றியம் சார்பாக 50 பேரை இணைத்துக் கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 100 சந்தாக்களை சேர்த்து ஜூன் 15 அன்று வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
உரத்தநாடு தெற்கு ஒன் றிய கழகத்தின் சார்பில் 5 இடங்களில் திராவிடர் கழக கொள்கை விளக்க கூட்டங் களை நடத்துவதென தீர்மானிக் கப்படுகிறது.
