புதுடில்லி, ஜூன் 24 ஒன்றிய அரசு விதித்திருந்த தற்காலிக தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, ‘டெலிகிராம்’ (Telegram) செயலி நேற்றுமுன்தினம் (22.6.2026) முதல் இந்தியாவில் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெலிகிராம் செயலி வழியாகவே வினாத்தாள்கள் பரப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மறுதேர்வு முடியும் வரை தற்காலிகமாக இந்தச் செயலிக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.
மக்களின் ஏமாற்றமும், அரசின் மீதான விமர்சனமும்
முறைகேடுகளை வேரோடு தடுக்க முடியாத அரசு, பெயருக்கு ஒரே ஒரு செயலியை மட்டும் தற்காலிகமாகத் தடை செய்துவிட்டு, தற்போது மீண்டும் அதனைச் செயல்பட அனுமதித்திருப்பது பொதுமக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்று சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னர் கல்வான் எல்லைத் தாக்குதலின் போது, சீனாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பதிலடி கொடுப்பதாகக் கூறி பல சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. ஆனால், அந்தச் செயலிகள் அனைத்தும் தற்போது வேறு வேறு பெயர்களில், புதிய வடிவங்களில் இந்தியாவில் தடையின்றி இயங்கி வருகின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
பின்னணியில்
மார்வாடிகளின் முதலீடு?
மார்வாடிகளின் முதலீடு?
தற்போது இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேறு பெயர்களில் சட்டவிரோதமாக இயங்கி வரும் இந்தச் செயலிகளின் நிறுவனங்களில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெரும் மார்வாடி தொழிலதிபர்கள் மற்றும் வட இந்தியப் பணக்காரர்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பொருளாகவும், பணமாகவும் முதலீடு செய்திருப்பது தற்போதைய விசாரணைகளில் அம்பலமாகி வருகிறது.
வினாத்தாள் கசிவு போன்ற தேசிய அளவிலான முறைகேடுகளுக்கும், நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் காரணமான செயலிகள் மீது நிரந்தர நடவடிக்கை எடுக்காமல், தற்காலிகத் தடைகளை மட்டும் விதித்து அரசு யாரைக் காப்பாற்ற முயல்கிறது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
