பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தலைநகர் டில்லி முதலிடமும், மும்பை இரண்டாவது இடமும் பெற்றுள்ளது!

1 Min Read

தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்!

புதுடில்லி, மே 8 –  2024 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு களில் பெரு நகரங்கள் வரிசையில் தலைநகர் டில்லி முதல் இடத்தில் உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 75 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 13 ஆயி ரத்து 400 வழக்குகள் பெண்கள் தொடர்பான குற்ற வழக்குகள் என்று அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் மும்பை இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 98 ஆயிரத்து 375 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டைவிட 8 சதவீதம் அதிகம் என்றும் தேசிய குற்ற ஆவண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது., குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் ஒரு லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், சைபர் குற்றங்கள் 18 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 928 வழக்குகள் பதி வாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றங்கள் 4.6% அதிக ரித்துள்ளதாகவும், 2 லட்சத்து 14 ஆயிரம் பொருளாதார குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள தாகவும், தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *